Home நாடு பிடிபிடிஎன் – கடன் பெற்ற மாணவர்கள் செலுத்த வேண்டிய அட்டவணை

பிடிபிடிஎன் – கடன் பெற்ற மாணவர்கள் செலுத்த வேண்டிய அட்டவணை

1011
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பிடிபிடின் கடன் பெற்ற மாணவர்கள் எவ்வளவு தொகையை மாதா மாதம் செலுத்த வேண்டும் என்ற சர்ச்சை ஒருபுறமும், இந்த விவகாரத்தில் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் தங்களின் தேர்தல் வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறி விட்டது என்ற குற்றச்சாட்டுகள் ஒருபுறமும் நீடித்து வரும் நிலையில் கடன் பெற்றவர்கள் எவ்வளவு தொகையைத் தங்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து திரும்ப செலுத்த வேண்டும் என்ற அட்டவணையை பிடிபிடிஎன் சார்பில் அதன் தலைவர் வான் சைபுல் வெளியிட்டுள்ளார்.

அந்த அட்டவணை பின்வருமாறு:

இதற்கிடையில், பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக்கைத் தற்காத்துப் பேசியுள்ளதோடு, ஆறு மாத காலமே அவர் கல்வி அமைச்சராக இருந்திருப்பதால், அவருக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

பிடிபிடிஎன் விவகாரத்தில் மஸ்லீயையும், பிடிபிடிஎன் தலைவர் வான் சைபுலையும் சந்தித்துப் பேசவிருப்பதாகவும் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

பிடிபிடிஎன் விவகாரம் குறித்துக் கருத்துரைத்த மனித வள அமைச்சர் எம்.குலசேகரன், சம்பந்தப்பட்ட கடன் பெற்றவர்களின் சம்பளத்திலிருந்து, அவர்களின் அனுமதியின்றி பிடிபிடிஎன் மாதா மாதம் ஒரு தொகையைப் பிடித்தம் செய்ய முடியும் என்றும் அதற்கு சட்டம் வகை செய்கிறது என்றும் அறிவித்துள்ளார்.