Home இந்தியா காற்று மாசுபாடு காரணமாக இந்தியாவில் இறப்பு விகிதம் அதிகரிப்பு

காற்று மாசுபாடு காரணமாக இந்தியாவில் இறப்பு விகிதம் அதிகரிப்பு

1967
0
SHARE
Ad

புதுடில்லி:  இந்தியாவில் காற்று மாசுபாடு காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 1.24 மில்லியனாக பதிவாகிவுள்ள வேளையில் சராசரியாக ஒருவரின் ஆயுட்காலம் 1.7 ஆண்டு குறைகிறது என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

வியாழன் அன்று லான்சட் பிளானட்டரி ஹெல்த் மையத்தில் (Lancet Planetary Health) வெளியிடப்பட்ட ஆய்வில், இந்த இறப்புகளில் 51.4 விழுக்காடு 70 வயதிற்கும் குறைவாக உள்ளவர்களிடையே நிகழ்கிறது என பதியப்பட்டிருக்கிறது.

டெல்லியில் அதிக அளவிலான காற்று மாசு (PM2.5) பதிவிடப்பட்டுள்ள நிலையில், அதனை அடுத்து, வட இந்தியாவில் உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் ஹரியானா மாநிலங்களும் மோசமான காற்று மாசுபாட்டைக் கொண்டுள்ளது அறியப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

தொழில்துறை உமிழ்வு, கட்டுமான நடவடிக்கை, செங்கல் உலைகள், போக்குவரத்து வாகனங்கள், சாலை தூசு, கழிவு சுத்திகரிப்பு, விவசாயக் கழிவுகள் எரியூட்டு மற்றும் டீசல் இயந்திரங்கள் காற்று மாசுபாட்டிற்கான முக்கியமான காரணங்களாக அமைகின்றன என அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

காற்று மாசுபாடு காரணமாக இந்தியாவில் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. உலகின் 14 மிக மாசுபட்ட நாடுகளில் இந்தியா இடம் பெற்றிருப்பதாக உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) இந்த ஆண்டு தொடக்கத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.