Home நாடு உயர் கல்வி மாணவர்களின் பேச்சுரிமைக்கு இனி தடையில்லை!

உயர் கல்வி மாணவர்களின் பேச்சுரிமைக்கு இனி தடையில்லை!

951
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 50 ஆண்டுகளுக்குப் பிறகு, பல்கலைக்கழக மாணவர்கள் தீவிரமாகத் தங்களை அரசியலில் ஈடுபடுத்திக் கொள்ளும் புதிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு, இது குறித்த மூன்று சட்டங்கள் திருத்தி அமைக்கப்படும் எனும் சட்ட மசோதாக்களை நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டது. இதில், பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழக கல்லூரிகள் சட்டமும் 1971 (Akta Universiti dan Kolej Universiti) அடங்கும்.

தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் சட்டம் 1996 (Akta Institusi Pendidikan Tinggi Swasta 1996) மற்றும் கல்வி நிறுவனங்கள் சட்டம் (ஒழுங்குமுறை) 1976 (Akta Institusi-institusi Pelajaran (Tatatertib) 1976) ஆகியவை  திருத்தி அமைக்கப்படவிருக்கும் இதர இரு சட்டங்கள் ஆகும்.

திருத்தி அமைக்கப்படும் இச்சட்டங்களினால் மாணவர்கள் சுதந்திரமாக அரசியல் குறித்த தங்களின் கருத்துகளை வெளியிடலாம் எனவும், இந்த சுதந்திரம் நன்முறையில் பயன்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் தெளிவுப்படுத்தினார்.   

#TamilSchoolmychoice

அவர்களது சொந்த பல்கலைக்கழகங்களில் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளும் உள்ளன. அதே போல் பல்கலைக்கழகத்திற்கு வெளியே உள்ள சட்டங்களை மதிக்க வேண்டிய அவசியத்தை மாணவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்” என்று மஸ்லீ கூறினார்.

இந்தச் சட்ட திருத்தங்களுக்குப் பிறகு, நீதிமன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டோர் அல்லது அவரவர் பல்கலைக்கழங்களில் ஒழுக்காற்று வழக்குகளில் தண்டிக்கப்பட்டோர் யாராயினும் இருந்தால், அவை அனைத்தும் உடனடியாக ரத்து செய்யப்படும் என்று மஸ்லீ அறிவித்தார்.