Home நாடு சீ பீல்ட்: காவலில் இருக்கும் அதிகாரிகளின் எண்ணிக்கைக் குறைக்கப்படும்

சீ பீல்ட்: காவலில் இருக்கும் அதிகாரிகளின் எண்ணிக்கைக் குறைக்கப்படும்

895
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சீ பீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயிலின், தற்போதையச் சூழலைக் கருத்தில் கொண்டு, அங்கு காவலுக்கு நிறுத்தப்பட்டிருக்கும் காவல் துறையினரின் எண்ணிக்கையைக் குறைக்க எண்ணம் கொண்டிருப்பதாக காவல் துறை குறிப்பிட்டுள்ளது. இது குறித்து தாம் சிலாங்கூர் காவல் துறையுடன் பேச உள்ளதாக, தேசியக் காவல் துறைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் புசி ஹருண் தெரிவித்தார்.

தற்போது அக்கோயில் வளாகத்தில் 80 காவல் அதிகாரிகள் நிறுத்தப்பட்டிருப்பதாக பெர்னாமா குறிப்பிட்டுள்ளது.

மேலும் பேசிய புசி, கோயில் கலவரத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைதாகி உள்ளோரின் எண்ணிக்கை 106-ஆக பதிவாகி உள்ளது என்றார். இதே கலவரத்தில் காயமடைந்த தீயணைப்பு வீரர் முகமட் அடிப், தற்போது நல்ல முறையில் தேறி வருவதாகவும், ஆனால், இன்னும் அவர் தீவிர சிகிச்சையின் கீழ் கண்காணித்து வரப்படுவதாகவும் புசி தெரிவித்தார். அவரது நிலைமை சரியானதற்குப் பின்பு, அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்படும் எனவும் புசி கூறினார்.