Home நாடு சபா மாநில அம்னோ கட்சி இன்று கலைக்கப்படும்!

சபா மாநில அம்னோ கட்சி இன்று கலைக்கப்படும்!

1079
0
SHARE
Ad

சபா: சபாவில் நான்கு அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கட்சியை விட்டு வெளியேற உள்ளதாக நம்பப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இன்று மாநில அம்னோ கட்சி முழுமையாக கலைக்கப்படும் என மாநில அம்னோ தொடர்புக் குழுவின் தலைவர் ஹாஜி நோர் அறிவிப்பார் எனவும் கூறப்படுகிறது.

குடாட் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரகிம் பாக்ரி, பிபோர்ட் நாடாளுமன்ற உறுப்பினர் அஸீஸா முகமட் டுன், லிபரான் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகாரியா முகமட் எட்ரிஸ் மற்றும் பெலூரன் நாடாளுமன்ற உறுப்பினர் ரொனால்ட் கியண்டி ஆகியோர் கட்சியிலிருந்து வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கினாபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினர் பங் மொக்தார் ராடின் அம்னோவிலிருந்து வெளியாக போவதில்லை என கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

கடந்த 14-வது பொதுத் தேர்தலில் சபா அம்னோ, மாநிலத்தில் 26 நாடாளுமன்ற இடங்களில் எட்டு இடங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

வெளியேறவிருக்கும் இவர்கள் நால்வரும் வாரிசான் அல்லது பெர்சத்து கட்சியில் இணைவர் எனக் கூறப்படுகிறது. சபா, பெரிய மாநிலமாக இருப்பதால், தற்போது ஆட்சியில் உள்ள மாநில மற்றும் மத்திய அரசுடன் நிலையான முடிவுகள் எடுப்பதற்கு தற்போதைய கட்சியின் நிலவரம் இடம் கொடுக்காது எனவும், இதனால் அரசியலில் நெடுங்காலம் நிலைத்து தத்தம் தொகுதிகளில் செயலாற்ற இயலாத சூழல் ஏற்படும் என எண்ணத்தினால்தான் இவர்கள் கட்சியை விட்டு விலகும் நிலை ஏற்பட்டு உள்ளது.