Home நாடு ஏஎப்எப் கோப்பை: இன்றிரவு மலேசியா-வியட்னாம் பரபரப்பான மோதல்

ஏஎப்எப் கோப்பை: இன்றிரவு மலேசியா-வியட்னாம் பரபரப்பான மோதல்

1188
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 2018 ஆண்டின் ஏஎப்எப் சுசூகி கோப்பையின் (AFF Suzuki Cup Championship) முதலாவது இறுதிச் சுற்று  ஆட்டத்தில், இன்று மலேசியா வியட்நாமை சந்திக்கவுள்ளது. இரு முறை வெற்றியாளரான தாய்லாந்தை கடந்த டிசம்பர் 5-ம் தேதி, அரை இறுதிச் சுற்றில் தோற்கடித்த மலேசிய அணி, இறுதியாக 2010-ம் ஆண்டு வெற்றிக் கொண்ட அக்கோப்பையை இம்முறை மீண்டும் வெல்லும் என மலேசியக் காற்பந்து பயிற்றுனர், டான் செங் ஹோ கூறினார்.    

இந்த ஆட்டம் இன்று இரவு 8:45 மணியளவில் புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெறவுள்ளது.

“இது எங்களுக்கு மிக முக்கியமான விளையாட்டு. ஆகையால் விளையாட்டாளர்கள் அனைவரும்  எல்லா வகையிலும் தயார் நிலையில் இருக்கிறார்கள்”, என டான் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும் பேசிய டான், சொந்த அரங்கில் வெற்றிப் பெறுவது போன்று வியாட்நாமில் நடைபெற இருக்கும் இரண்டாவது ஆட்டத்திலும் வெற்றிப் பெறுவது முக்கியமானதாக அமைகிறது என்றார்.

“நான் அன்றைய பயிற்சியாளர் டத்தோ கெ. ராஜாகோபால் மீது பெறும் மதிப்பு வைத்திருக்கிறேன். அவர் காலத்தில் பெற்ற வெற்றியானது இக்காலத்திலும் தொடரும் என நம்புகிறேன்”, என டான் கூறினார்.

2010-ம் ஆண்டில் நாம் அனைவரும் மலேசியர்களாக ஒற்றிணைந்து போட்டியாளர்களை உற்சாகப் படுத்தி வெற்றிக் கண்டோம். அப்போக்கு இன்றைய ஆட்டத்திலும் தொடர வேண்டும் என டான் கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே, முன்னதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், இன்று களமிறங்க இருக்கும் போட்டியாளர்களை சந்தித்து, தம்மையும் நாட்டு மக்களையும் ஏமாற்றி விட வேண்டாம் என்று கூறியுள்ளார். போட்டியாளர்கள் நாட்டின் நற்பெயரையும், பெருமையையும் நிலை நிறுத்த இம்மாதிரியான தருணங்கள் தேவைப்படுவதாக பிரதமர் கூறினார். உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் கூடிய விரையில் மலேசிய அணி பங்கெடுத்து விளையாடும் எனும் தமது எதிர்பார்ப்பையும் முன்வைத்தார் பிரதமர்.

இறுதிச் சுற்றின் இரண்டாம் ஆட்டம் ஹானோயில் டிசம்பர் 15-ம் தேதி நடைபெறும்.