புத்ராஜெயா: முன்னாள் 1எம்டிபி நிர்வாக இயக்குனர் அருள்கந்தா கந்தசாமி, 1எம்டிபியின் கணக்கறிக்கையில் திருத்தம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை எதிர் நோக்கியுள்ளார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு இன்று காலை 9.30 மணியளவில் அவர் பின் வாசல் வழி வந்தடைந்தார். பின்பு, காலை 10:30 மணி அளவில் அவர் கைது செய்யப்பட்டார் என, அவரின் வழக்கறிஞர் என். சிவநாதன் தெரிவித்தார்.
1எம்டிபியின் கணக்கறிக்கையில் திருத்தம் செய்ததற்காக, முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்குடன், அருள் கந்தா ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர் நோக்குவார் என நேற்றுக் கூறப்பட்டது. நேற்று, முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டு, பின்பு பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.