Home இந்தியா ராஜஸ்தான் சட்டமன்ற முடிவுகள் – பாஜக -12; காங்கிரஸ் -26 (முன்னணி)

ராஜஸ்தான் சட்டமன்ற முடிவுகள் – பாஜக -12; காங்கிரஸ் -26 (முன்னணி)

851
0
SHARE
Ad

ஜெய்ப்பூர் – இந்தியாவின் 5 மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டிஸ்கார், தெலுங்கானா, மிசோராம், ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களுக்கான முடிவுகள் இன்று காலை முதல் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக தோற்கடிக்கப்படும் என்றும், அதன் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா பதவியை இழப்பார் என்றும் கருத்துக் கணிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் மொத்தமுள்ள 199 இடங்களில் 38 இடங்களுக்கான முடிவுகள் முதல் கட்டமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இதில் காங்கிரஸ் 26 இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும் முன்னணி வகிக்கின்றன.