Home உலகம் தெரசா மே நம்பிக்கை வாக்கெடுப்பில் 83 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி

தெரசா மே நம்பிக்கை வாக்கெடுப்பில் 83 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி

1844
0
SHARE
Ad

இலண்டன் – நேற்று நடைபெற்ற பிரிட்டனின் பிரதமர் தெரசா மே (படம்) தலைமைத்துவம் மீதான கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் 83 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

இரண்டு மணி நேரம் நடைபெற்ற வாக்கெடுப்பில் தெரசா மே 200 வாக்குகள் பெற்ற நிலையில், அவருக்கு எதிராக 117 வாக்குகள் விழுந்தன.

தெரசா மே வகுத்திருக்கும் பிரெக்சிட் (BREXIT) எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான திட்டத்திற்குக் கிடைத்திருக்கும் ஆதரவாக இது கருதப்படுவதால் இனி பிரெக்சிட் திட்டத்தை அமுலாக்குவதற்கு அவர் மும்முரமாக ஈடுபடுவார்.

#TamilSchoolmychoice

இனி அடுத்த ஓராண்டுக்கு தெரசா மே-க்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கொண்டு வர முடியாது என்பதால், அவர் பிரெக்சிட் திட்டத்தை துரிதப்படுத்துவதற்கும், கட்சியிலிருந்து எதிர்ப்புகள் இல்லாமல் செயலில் இறங்குவதற்கும் நேற்றைய நம்பிக்கை வாக்கெடுப்பு வழிவகுத்துள்ளது.

முன்னதாக கன்சர்வேடிவ் உறுப்பினர்களிடையே உணர்ச்சிமிகு உரையாற்றிய தெரசா மே, பின்னர் தனிப்பட்ட முறையில் கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பேசியபோது, பிரெக்சிட் திட்டத்தைச் செயல்படுத்தியவுடன் தான் பதவி விலகிவிடப் போவதாகக் கூறியதாகவும், பிரிட்டன் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.