நீண்ட காலமாக சிங்கப்பூர் பேச்சு சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதால் பலரால் விமர்சிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
டெரி சூ தனது சொந்த வலைத்தளமான “தி ஆன்லைன் சிட்டிசன்” பக்கத்தில், சிங்கப்பூர் அரசாங்கத்தில் “மிக உயர்ந்த அடுக்கில் ஊழல்” எனும் பதிவினை வெளியிட்டு இக்குற்றச்சாட்டிற்கு உள்ளானார்.
காவல் துறையினர் சூவின் இருப்பிடத்திற்குச் சென்று அவரது கணினிகள் மற்றும் இதர சாதனங்களைக் கைப்பற்றினர்.
அந்த வலைத்தளம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், தற்போது அது மீண்டும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
சூவிற்கு இரண்டு ஆண்டுகள் அதிகபட்ச சிறைத் தண்டனையும் அல்லது அபராதமும், அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.