Home நாடு சீ பீல்ட்: அனைத்து தரப்பினரும் புதிய உடன்படிக்கைக்கு சம்மதம்!

சீ பீல்ட்: அனைத்து தரப்பினரும் புதிய உடன்படிக்கைக்கு சம்மதம்!

947
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா: கடந்த மாதம் சீ பீல்ட் கோயில் பிரச்சனையில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும், தற்போது புதிய உடன்படிக்கைக்கு ஒப்புக் கொண்டுள்ளதாகத் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தார்.

இந்த உடன்படிக்கையானது நில உரிமை மற்றும் அறக்கட்டளை நிருவாகம் குறித்தும் அடங்கியிருக்கும் என அவர் குறிப்பிட்டார்.    

கோயில் நிறுவப்பட்டிருக்கும் நிலமானது, ஓன் சிட்டி நிறுவனத்திற்குச் சொந்தமானது. இந்த உடன்படிக்கைக்குப் பின்னர், அந்நிறுவனம், உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில், அக்கோயிலின் நிலப்பட்டாவை வேறொரு அறக்கட்டளைக்கு பரிமாற்றம் செய்துத் தரும் என அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இது குறித்து அக்கோயில் பிரச்சனையில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரின் வழக்கறிஞர்களும் கலந்து பேசிவிட்டதாகவும் அவர் கூறினார்.