கோலாலம்பூர்: பிடிபிடிஎன் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தும் புதிய முறையை செயல்படுத்த, அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்குள் முக்கியமான தரப்புகளுடன் கலந்து பேசவுள்ளதாக, அதன் துணை நிருவாக இயக்குனர் மஸ்தூரா முகமட் காலிட் தெரிவித்தார்.
எல்லாத் தரப்பினரின் ஆலோசனைகளையும் கேட்டறிந்தப் பின்பு, கடனை அடைக்கும் புதிய வழிமுறையினை அரசாங்கம் அறிவிக்கும் என அவர் கூறினார்.
இதற்கிடையே, அமைச்சரவையின் உத்தரவுப்படி பிடிபிடிஎன் அடுத்த வருடம் அறிமுகம் செய்ய இருந்த புதிய நடைமுறையிலான கடன் அடைப்புத் திட்டத்தினை ஒத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது. அத்திட்டத்திற்கு பெரும்பாலானோரிடமிருந்து எதிர்ப்பலை எழுந்ததால் அத்திட்டம் நிறுத்தி வைக்கப்படும் என கல்வி அமைச்சர் மஸ்லி மாலீக் அறிவித்திருந்தார்.
இவ்விவகாரம் குறித்த கலந்துரையாடலின் விளைவுகளை செயல்படுத்துவதற்கு முன்பாக கல்வி அமைச்சிடம் இது பற்றி பேசப்படும் என்றார்.