Home கலை உலகம் “பேட்ட” 3-வது பாடல் – ‘பேட்ட பராக்’ – அனிருத்தின் அதிரடி

“பேட்ட” 3-வது பாடல் – ‘பேட்ட பராக்’ – அனிருத்தின் அதிரடி

1040
0
SHARE
Ad

சென்னை – பொங்கல் வெளியீடாக அறிவிக்கப்பட்டிருக்கும் ‘பேட்ட’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. படம் வெளிவருவதற்கு முன்னால் அவ்வப்போது, பாடல்கள், முன்னோட்டங்கள் என சமூக ஊடங்களில் வெளியிட்டு படத்திற்கான பரபரப்பை அதிகரிக்கச் செய்யும் விளம்பர யுக்தியைத் தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் தொடர்ந்து கையாண்டு வருகிறார்கள்.

அந்த வரிசையில் முதலில் ‘மரண மாஸ்’ என்ற பாடலை வெளியிட்ட படக்குழு அதன்பின்னர் ‘உல்லாலா’ என்ற மற்றொரு பாடலை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவும் கோலாகலமாக நடந்தேறியது.

#TamilSchoolmychoice

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ‘பேட்ட பராக்’ என ரஜினிக்காக அனிருத் குரலிலும் – இசையிலும் ஒலிக்கும் அந்தப் படத்தின் காணொளியைக் கீழ்க்காணும் இணைப்பில் பார்த்து மகிழலாம்: