Home கலை உலகம் ஏ.ஆர். முருகதாஸ்: ‘துப்பாக்கி 2’ வருவது உறுதி!

ஏ.ஆர். முருகதாஸ்: ‘துப்பாக்கி 2’ வருவது உறுதி!

1083
0
SHARE
Ad

சென்னை: கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியீடு கண்ட துப்பாக்கி திரைப்படம் நடிகர் விஜயின் முக்கியப் படங்களில் ஒன்றாக அமைந்தது. இத்திரைப்படத்தினை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினார். தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக இத்திரைப்படம் திகழ்ந்தது.

இந்நிலையில் சமீபத்தில் முன்னணி சினிமா இணையத்தளம் நடத்திய விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், கண்டிப்பாகதுப்பாக்கி 2′ திரைப்படம் உருவாக்கும் முயற்சியில் இறங்குவேன் என உறுதி அளித்தார். இந்த அறிவிப்பிற்குப் பின்பு விஜயின் இரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்புகள் உயர்ந்துள்ளன என்றே கூற வேண்டும். மேலும், பேசிய முருகதாஸ் துப்பாக்கி 2 திரைப்படம், முந்தையப் படத்தை விட பல மடங்கு விறுவிறுப்பாக நகரும் எனக் கூறினார். 

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் முதன் முதலாக இணைந்து பணியாற்றியத் திரைப்படம் துப்பாக்கியாகும். இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக நகர்த்தப்பட்டிருக்கும். ஆகவே, இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது