Home இந்தியா சபரிமலை: தமிழக பெண் பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!

சபரிமலை: தமிழக பெண் பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்!

910
0
SHARE
Ad

கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்ய இருந்த 30 தமிழக பெண்கள், கோயிலுக்குள் செல்ல அனுமதிக்காதப் பட்சத்தில் மீண்டும் தமிழ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கேரள தமிழ்நாடு எல்லையில் உள்ள இடுக்கி, கம்பமேடு வழியாக வந்தடைந்த அப்பெண்களை, சபரிமலைக்கு செல்லும் வழியில் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.

வழிபாட்டிற்கு வந்த பெண்கள் தங்களின் பாதுகாப்பு கருதி, திரும்பிச் செல்ல உள்ளதாகக் கூறினர். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு சபரிமலை கோயிலுக்குச் செல்ல முற்பட்ட பெரிய அளவிலான பெண்கள் கூட்டம் இதுவே எனக் கூறப்படுகிறது.

காவல் துறையினரின் பாதுகாப்பு இப்பெண்களுக்கு வழங்கப்பட்ட போதும், போராட்டக்காரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியதால், அவர்கள் காவல் துறையினரின் முகாமிற்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, கடந்த அக்டோபர் மாதம், நூற்றுக்கணக்கான காவல் துறையினரின் பாதுகாப்புடன் ரெஹானா பாத்திமா எனும் பெண் பத்திரிகையாளர் மற்றும் அவருடன் சென்ற இதர பெண்களும், சபரிமலையின் முக்கியச் சன்னிதானத்தை அடைந்தனர். ஆனால், பக்தர்களின் எதிர்ப்பால் அவர்கள் உள்ளே செல்ல இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.