Home நாடு எல்லா நிலைப்பாடுகளிலும் நேர்மறையாக செயல்படுவோம்!- வான் அசிசா

எல்லா நிலைப்பாடுகளிலும் நேர்மறையாக செயல்படுவோம்!- வான் அசிசா

798
0
SHARE
Ad

கோலாலம்பூர்: துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் மலேசியர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இம்மாதிரியான விழாக்காலத்தில், நட்புறவினை நிலை நிறுத்தி, சகோரத்துவத்தை மேலோங்கச் செய்வதில் நாம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

நம் மலேசியர்களிடையே தொடர்ந்திருக்கும் நட்புறவானது, எளிதில் தகர்க்கக் கூடிய ஒன்றல்லஎன்று அவர் கூறினார்.

எதிர்மறையான விசயங்களில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும், மலேசியர்கள் அனைத்து நிலைப்பாடுகளையும் நேர்மறையாகக் கவனிக்க வேண்டும் என்றும் வான் அசிசா கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, பாஸ் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர், முகமட் கலில் அப்துல் ஹாடி, இஸ்லாமிய போதனைகளுக்கு எதிரான கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது, முஸ்லீம்கள் கிறிஸ்துவர்களுக்கு, வாழ்த்துகளைக் கூற வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.