Home நாடு இணையம் வழி கடப்பிதழை புதுப்பிக்கலாம்!- குடிநுழைவுத் துறை

இணையம் வழி கடப்பிதழை புதுப்பிக்கலாம்!- குடிநுழைவுத் துறை

988
0
SHARE
Ad
MyOnline-passport-inforgraphics

கோலாலம்பூர்: மலேசியர்கள் தங்களின் கடப்பிதழ்களை இணையம் வழியாக புதுப்பிப்பதற்காகக் குடிநுழைவுத் துறை ஏற்பாடு செய்துள்ளது. அவ்வாறு செய்வதற்கான வழிமுறைகளை மேலே கொடுக்கப்பட்ட பெர்னாமாவின் விளக்கப்படம் மூலம் தெரிந்து கொள்ளலாம்:

  • விண்ணப்பதாரர்கள் 13 அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள்  இணைய பக்கத்தில் சரியாகவும் துல்லியமாகவும் தங்களின் விபரங்களை நிரப்ப வேண்டும்.
  • சமீபத்திய பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்
  • கடன் பற்று அட்டை/ வங்கி பற்று அட்டை மூலம் பணத்தைச் செலுத்த முடியும்
  • கட்டண விகிதம்:
  1. பொதுவான கட்டணம்:  13 வயது முதல் 59 வயது வரை : 200 ரிங்கிட்
  2. மூத்த குடிமக்கள்: 100 ரிங்கிட்
  • விண்ணப்பதாரர்கள் தங்களுடைய அடையாள அட்டை, முந்தைய கடப்பிதழ், மற்றும் பணம் செலுத்திய ரசீது ஆகியவற்றை நேரடியாக குடிநுழைவுத் துறை அலுவகத்திற்குக் கொண்டு சென்று புதிய கடப்பிதழைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.