Home நாடு வேதமூர்த்திக்கு ஆதரவாக வழக்கறிஞர் சித்தி காசிம் கோரிக்கை மனு வழங்கினார்!

வேதமூர்த்திக்கு ஆதரவாக வழக்கறிஞர் சித்தி காசிம் கோரிக்கை மனு வழங்கினார்!

814
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான சித்தி காசிம், இன்று 50 ஆதரவாளர்களுடன் இணைந்து பிரதமர் துறை அமைச்சர் பி. வேதமூர்த்தியை பதவியில் தொடர்ந்து நிலைக்க வைக்குமாறு, கோரிக்கை மனு ஒன்றினை பிரதமர் மகாதீர் முகமட் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

இது குறித்துப் பேசிய சித்தி, 211 அரசு சாரா அமைப்புகள் இந்தக் கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

வேதமூர்த்தி இந்தியர்களுக்கு மட்டும், சேவையாற்றாமல் இதர மக்களுக்கும், குறிப்பாக பூர்வக்குடியினருக்கும் சேவையாற்றி வருவதாக அவர் கூறினார். மேலோட்டமாக அவர், தனது கடமையைச் செய்ய தவறிவிட்டார் எனக் குற்றம் சாட்டுவது தவறு என சித்தி கூறினார்.

புத்ராஜெயாவில் பிரதமரின் அலுவலகத்தில் காலை 11:30 மணியளவில், பிரதமரின் அரசியல் செயலாளர் அபு பாக்கரிடம் இக்கோரிக்கை மனு ஒப்படைக்கப்பட்டது.