Home நாடு ஜனவரி 1 முதல் உணவகங்களில் புகை பிடிக்க முடியாது

ஜனவரி 1 முதல் உணவகங்களில் புகை பிடிக்க முடியாது

872
0
SHARE
Ad

ஈப்போ – உணவகங்களில் புகைபிடிக்கத் தடைவிதிக்கும் சுகாதார அமைச்சின் நடைமுறை எதிர்வரும் ஜனவரி 1 முதல் கட்டாயமாக அமல்படுத்தப்படும் என சுகாதார துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் திட்டவட்டமாக அறிவித்தார்.

புகைபிடிக்கும் வழக்கம் உள்ளவர்களின் உரிமைகளுக்கு இடம் கொடுக்கும் அதே வேளையில், புகை பிடிக்காதவர்கள் அதனால் பாதிப்புக்குள்ளாவதற்கும் சுகாதார அமைச்சு எந்த வகையிலும் அனுமதிக்காது என அவர் நேற்று இங்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார்.

புகைபிடிப்பவர்கள் யாரும் அருகில் இல்லாத – மக்கள்  நெருக்கம் இல்லாத இடங்களில் தாராளமாகப் புகைப்பிடிக்கலாம் என்றும் கூறிய அவர் உணவகங்களில் புகைப்பிடிப்பதற்கான தடை கண்டிப்பாக அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

உணவருந்த வரும் வாடிக்கையாளர்களைப் புகைபிடிக்காமல் தடுத்து நிறுத்துவதில் சிரமங்கள் இருப்பதை உணர்ந்து, உணவகங்களில் புகைபிடிப்பதற்கு தடை விதிக்கும் நடைமுறையை ஒத்தி வைக்குமாறு மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கம் (பிரிமாஸ்) அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தது தொடர்பில் லீ பூன் சாய் கருத்துரைத்தார்.