Home நாடு அடிப் மரணத்திற்கு காரணம் என்ன? – விசாரணை வாரியம் அமைக்கப்படும்

அடிப் மரணத்திற்கு காரணம் என்ன? – விசாரணை வாரியம் அமைக்கப்படும்

714
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா: அரசாங்கத் தலைமை வழக்கறிஞர், டோமி தோமஸ் தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் மரணத்தின் காரணத்தை ஆராய விசாரணை வாரியம் ஒன்றை அமைப்பார் என உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார். டோமி தாமஸ் இந்த விவகாரத்தை அவருக்குத் தெரிவித்ததாக அமைச்சர் கூறினார்.

முடிந்தவரை விரைவில் இவ்விசாரணையைத் தொடங்கச் செய்யுமாறு நீதிமன்றத்திற்கு அவர் உத்தரவு இடுவார் என மொகிதின் கூறினார். பரந்த அளவிலான அதிகாரத்தை பயன்படுத்தி அடிப்பின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணை வாரிய நீதிபதி செயல்படுவார் எனவும் மொகிதின் கூறினார்.

குறிப்பிட்ட ஒரு கூட்டத்தின் நடவடிக்கையினால் மரணம் ஏற்பட்டதா என்பதும் முடிவு செய்யப்படும்”, என அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

காவல் துறையினர், பலரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதுடன், அடிப் காயங்களுக்கு வழிவகுத்த சம்பவத்தின் காணொளிகள் மீள்காட்சி செய்தும் பார்க்கப்பட்டது என அவர் தெரிவித்தார். தடயவியல் பிரிவு நடத்திய ஆய்வின் அடிப்படையில் அடிப் மரணத்திற்கு காரணமான சில ஆதாரங்களைப் பெற்றுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இதற்கிடையில், மரணமடைந்த அடிப் மீதான விசாரணை வாரியம் அமைப்பதற்கு முஸ்லீம் வழக்கறிஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

எனினும் வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சர் சுராய்டா கமாருடின் அடிப் மீதான விசாரணை வாரியம் தொடர்ந்து தனது பணிகளை மேற்கொள்ளும் என உறுதியளித்துள்ளார்.