Home நாடு முகமட் அடிப்: மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்!

முகமட் அடிப்: மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்!

1799
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சீ பீல்ட் கோயில் கலவரத்தில் மரணமுற்ற முகமட் அடிப் முகமட் காசிமிற்கு நீதி கிடைக்க வேண்டும் என மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை கேட்டுக் கொண்டது.

அதன் தலைமை இயக்குனர் டத்தோ முகமட் ஹம்டான் வாஹிட் கூறுகையில், அவ்வாறு செய்வதில் எந்தவொரு தடைகளும் இல்லாமல், தகுந்த நீதியை அவருக்கு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.   

நாங்கள் அடிப்பின் மரண விசாரணைக்காகக் காத்திருக்கிறோம், மேலும், அதில் நீதி நிலை நிறுத்தப்படும் என நம்புகிறோம்” என முகமட் கூறினார்.

#TamilSchoolmychoice

முகமட் அடிப், கடந்த நவம்பர் மாதம், சீ பீல்ட் கோயில் கலவரத்தில் குறிப்பிட்ட ஒரு கூட்டத்தினால் தாக்கப்பட்டு, கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி மருத்துவமனையில் காலமானார்.