Home நாடு புகைப் பிடிக்கத் தடை: எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு

புகைப் பிடிக்கத் தடை: எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு

908
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று நள்ளிரவு 12 மணி தொடங்கி, நாட்டிலுள்ள அனைத்து உணவு வளாகங்களிலும் புகை பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என சுகாதார இயக்குனர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா (படம்) உறுதிப்படுத்தியிருக்கும் வேளையில், சுகாதார அமைச்சின் இந்த முடிவை எதிர்த்து புகைபிடிக்கும் ஒரு குழுவினர் இந்த முடிவால் மலேசிய அரசியல் அமைப்பின் கீழ் தங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகக்கூறி நீதிமன்றத்தில் சீராய்வு மனு வழக்கொன்றைத் தொடுத்துள்ளனர்.

புகைபிடிப்பாளர் உரிமை சங்கம் என்ற பெயர் கொண்ட புதியதோர் அமைப்பின் 7 உறுப்பினர்கள் சுகாதார அமைச்சின் முடிவை இரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கில் கோரியுள்ளனர்.

சுகாதார அமைச்சு, பொதுமக்களின், குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியோர்களை சிகரெட் புகையிலிருந்து பாதுகாக்க அனைத்து பாதுகாப்பு முறைகளையும் செயல்படுத்தி வருவதாக முகமட் ஹிஷாம் கூறினார்.  

#TamilSchoolmychoice

மேலும், அனைத்து கடை உரிமையாளர்களும், புகை பிடிக்கக் கூடாது எனும் எச்சரிக்கை விளம்பரத்தை அவர்களது கடையில் வைத்திருப்பது அவசியமாகிறது என்றும் அவர் கூறினார்.

தடை செய்யப்பட்ட இடத்தில் புகைப் பிடிப்பது போன்ற குற்றங்களைப் புரிந்தால் 10,000 ரிங்கிட் அபராதமும், 2 வருடங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம். அதே போல், கடை உரிமையாளர்கள் தங்களின் கடையில் புகை பிடிக்கக் கூடாது எனும் தெளிவான எச்சரிக்கை விளம்பரங்களை வைத்திருக்காமல் இருந்தால், 3,000 ரிங்கிட் வரையிலும் அபராதமும், ஆறு மாதங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனையும் வழங்கப்படும்.

புகைபிடிப்பதற்கான தடையை இதுவரையில் சரவாக் மாநிலம் மட்டுமே அமல்படுத்த முன்வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.