Home இந்தியா திருவாரூர் சட்டமன்றம் : ஜனவரி 28-இல் இடைத் தேர்தல்

திருவாரூர் சட்டமன்றம் : ஜனவரி 28-இல் இடைத் தேர்தல்

1122
0
SHARE
Ad

சென்னை – கலைஞர் மு.கருணாநிதி மறைவைத் தொடர்ந்து காலியாக இருந்து வரும் திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் எதிர்வரும் ஜனவரி 28-ம் தேதி நடைபெறும் என தமிழகத் தேர்தல் ஆணையம் இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

இடைத்தேர்தலுக்கான மனுதாக்கல் ஜனவரி 3-ஆம் தேதியும், மனுத் தாக்கல் செய்ய இறுதி நாள் ஜனவரி 10-ஆம் தேதி என்றும், ஜனவரி 11 முதல் வேட்பு மனுக்களை திரும்பப் பெறலாம் என்றும், வேட்பு மனுக்களை திரும்பப் பெற ஜனவரி 14-ஆம் தேதி இறுதி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணிக்கை ஜனவரி 31-ஆம் தேதி நடைபெறும். இதையடுத்து திருவாரூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.