திருவாரூர் இடைத் தேர்தலில் ஸ்டாலினே நேரடியாகப் போட்டியிடும் வாய்ப்புகள் குறித்தும், அதனால் ஏற்படக் கூடிய சாதக பாதகங்கள் குறித்தும் திமுக ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டாலினின் சகோதரரான மு.க.அழகிரி திருவாரூரில் போட்டியிடலாம் எனவும், அமமுக சார்பில் டிடிவி தினகரனும் இங்கு போட்டியிடலாம் என ஆரூடங்கள் பரவி வரும் நிலையில், திமுக அதிரடியாக ஸ்டாலினையே களமிறக்கி இடைத் தேர்தலைச் சந்திக்க முடிவு செய்யலாம் எனக் கருதப்படுகிறது.
ஸ்டாலின், டிடிவி தினகரன் இருவருமே முறையே கொளத்தூர், ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்களாக இருக்கின்றனர்.