Home நாடு பூர்வக்குடி மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியிலே கைவிடும் அவலம்!

பூர்வக்குடி மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியிலே கைவிடும் அவலம்!

737
0
SHARE
Ad

குவா மூசாங்: தங்கள் கிராமங்களுக்கு அருகாமையில் பள்ளிகளை அமைக்க அரசாங்கத்தை, கம்போங் அரிங் 5 மற்றும் கோலா கோ கிராம பூர்வக்குடியினர் கேட்டுக் கொண்டனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 100 மாணவர்கள் பள்ளிப் படிப்பினை பாதியிலேயே விட்டு விட்டதாகக் கூறிய கிராமத் தலைவர் ராய்னா அஞ்ஜாங், தங்கள் கிராமத்திற்கும் மிக அருகாமையில் இருக்கும் பள்ளியான பாசீர் லிங்கி தேசியப் பள்ளி, 100 கி.மீ தொலைவில் உள்ளதை சுட்டிக்காட்டினார்.

ஒராங் அஸ்லி மேம்பாட்டுக் கழகம் (JAKOA), பாசீர் லிங்கி தேசியப் பள்ளிக்கு போக்குவரத்து சேவையை வழங்கியிருந்தது, ஆயினும், அந்த சேவை நிராகரிக்கப்பட்டு விட்டதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை தொலைவில் வைத்து பார்க்க விரும்பவில்லை. அவர்கள் மிகவும் இளம் வயதினராக இருப்பதால், பெற்றோர்கள்   குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி  கவலைப்படுகின்றனர் என ராய்னா தெரிவித்தார்.