அமெரிக்கா: அமெரிக்க நாட்டின் முதல் முறையாக இரண்டு முஸ்லீம் பெண்கள் காங்கிரஸ் உறுப்பினர்களாக நேற்று பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இல்ஹான் ஓமார் மற்றும் ராஷிடா டிலெய்பு, இருவரும் 116-வது காங்கிரஸ் உறுப்பினர்களாக பதவியேற்றனர். அமெரிக்க வரலாற்றில், இரண்டு முஸ்லீம் பெண்கள் காங்கிரஸ் உறுப்பினராக நாடாளுமன்றத்தில் இணைவது இதுவே முதல் முறை.
நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு, ஆதரவாளர்கள் கூட்டமாக வந்தனர். அவர்களில் பெரும்பாலான பெண்கள் ஹிஜாப் அணிந்து, இரு முஸ்லீம் பெண்களின் பதவி ஏற்கும் நிகழ்ச்சியினைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஜனநாயக் கட்சி சார்பில் போட்டியிட்ட ராஷிடா டிலெய்பு மற்றும் இல்ஹான் ஓமார் வெற்றி பெற்று, முதல் பெண் முஸ்லீம் பிரதிநிதிகள் எனும் பெருமையை அடைந்தனர். டெட்ராய்ட் நகரில் பாலஸ்தீனிய தம்பதிகளுக்கு பிறந்தவர் ராஷிடா டிலெய்பு. இல்ஹான் ஓமார், கென்யாவில், ஒரு அகதி முகாமிலிருந்து தப்பித்து அமெரிக்கா வந்தவர். அவரைப் போன்று, சொமாலியா பூர்வீகம் கொண்ட ஒருவர் அமெரிக்க பிரதிநிதியாவது இதுவே முதன் முறை.