Home நாடு புகைபிடிப்பவர்களுக்கு எதிராக 500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும்!

புகைபிடிப்பவர்களுக்கு எதிராக 500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும்!

966
0
SHARE
Ad

கேமரன் மலை:  புகைத்தடுப்புப் பகுதிகளில் பொதுமக்கள் புகைப்பிடித்தால் 500 ரிங்கிட் அபராதத்தை சுகாதார அமைச்சு விதிக்கும்.

வாய்மொழி எச்சரிக்கைக்குப் பின்பு, மீண்டும் அந்நபர் அச்செயலைத் தொடர்ந்தால், சம்பந்தப்பட்ட நபருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும், அடுத்த இரண்டு வாரங்களில் அந்த அபராதத்தை அவர் செலுத்த வேண்டும் எனவும்  துணைசுகாதார அமைச்சர் லீ பூன் சாய் கூறினார்.

#TamilSchoolmychoice

அபராதத்தை செலுத்தத் தவறியவர், அல்லது மீண்டும் அக்குற்றத்தைச் செய்பவருக்கு எதிராக சட்டம் பாயும் எனவும் எச்சரித்தார். அவர்களுக்கு 10,000 ரிங்கிட் வரையிலும் அபராதமும் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என லீ கூறினார்.

இதற்கிடையே, நவம்பர் 6-ஆம் தேதி, அனைத்து உணவு வளாகங்களிலும் புகைபிடிப்பவர்களுக்கு எதிராக ஆறு மாதங்களுக்கு சட்ட ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.