Home Video பரியேறும் பெருமாள் கதிர் திருநங்கையாக உருமாறியக் கதை!

பரியேறும் பெருமாள் கதிர் திருநங்கையாக உருமாறியக் கதை!

1146
0
SHARE
Ad

சென்னை: தமிழ்த் திரைப்படத் துறையில் வளர்ந்து வரும் நடிகர்களின் பட்டியலில், இளம் நடிகர் கதிர் இடம்பெறுகிறார். மதயானைக் கூட்டம் எனும் திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்து, அத்திரைப்படம் மூலமாக தனது சிறப்பான நடிப்பிற்கு நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார். அதற்கு பின்பு, வெளியான கிருமி படமும் கதிருக்கு நற்பெயரை ஈட்டித் தந்தது.   

தாம் நடிக்கும் படங்களின் மையக் கருவை உள்வாங்கி, அதனை சிறந்த முறையில் வெளிக்கொணரும் கதிரின் திறமை பாராட்டுகளைப் பெற்றது. சமீபத்தில் அவர் நடித்து வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் பெருமளவில் பேசப்பட்டு, திரையுலக நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் பாராட்டு மழையை கதிர் பெற்றார்.

தமிழ் நாட்டில், தென்மாவட்டங்களில் வெளிப்படையாகவே நிலவும் சாதிவெறி, அதனைச் சார்ந்து நிகழ்த்தப்படும் கொடூரங்கள் பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் நீடித்திருப்பதை இத்திரைப்படம் உரக்கச் சொல்லி இருக்கும். இயக்குநர் பா. ரஞ்சித் இத்திரைப்படத்தினை தயாரித்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடித்து வெற்றிக் கண்ட திரைப்படமான விக்ரம் வேதாவிலும் கதிர் நடித்திருப்பார்.

இப்படியாக, சிறந்த திரைக்கதைகள் இடம்பெற்றிருக்கும் படங்களில் நடித்து வந்த கதிர், தற்போது சிகை எனும் திரைப்படத்தில், பாலியல் தொழில் செய்யும் திருநங்கையாக நடித்திருக்கிறார். எல்லா படங்களிலும், தம் சிறப்பான எதார்த்தமான நடிப்பினை தந்து வரும் கதிர், இப்படத்திலும் சிறந்த ஒரு நடிப்புனை வழங்கியிருப்பார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இத்திரைப்படத்தினை ஜகதீசன் சுபு இயக்கியுள்ளார்.

சிகை திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி சமீபத்தில் வெளியிடப்பட்டது.  நடிகர் விஜய் சேதுபதி, கதிரை பாராட்டி டுவிட்டர் பக்கத்தில் அந்த முன்னோட்டத்தை பதிவிட்டிருக்கிறார்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் சிகை திரைப்படத்தின் முன்னோட்டதைக் காணலாம்: