Home நாடு அனைத்து மக்களின் உணர்வுகளை அரசாங்கம் மதித்து செயல்படும்!

அனைத்து மக்களின் உணர்வுகளை அரசாங்கம் மதித்து செயல்படும்!

637
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கூட்டுத் தேர்வு சான்றிதழ் (யூஇசி) எனப்படும் சீன இடைநிலைப் பள்ளிகளுக்கான தேர்ச்சிச் சான்றிதழை    அங்கீகரிப்பதற்கு முன்னதாக, அனைத்து இனங்களின் உணர்வுகளையும் கருத்தில் கொள்ள வேண்டி உள்ளதாக பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் குறிப்பிட்டார். குறிப்பிட்ட ஒரு சாராரின் எண்ணங்களுக்கு மட்டும் செவி சாய்த்து, பின்பு, மற்ற இனங்கள் அவ்விவகாரத்தை வேறொரு கோணத்தில் பார்ப்பது சரியானது அல்ல என அவர் தெரிவித்தார்.   

அனைத்து மக்களின் உணர்வுகளையும் அரசாங்கம் மதித்து செயல்படும் என்றும், அவ்வாறு செயல்பட்டால் மட்டுமே மக்களின் ஆதரவை எப்போதும்பெற முடியும் என்றும் அவர் கூறினார்.

நான் யூஇசி திட்டத்தினை நிராகரிக்கிறேன் என்று சொல்லவில்லை. இந்த விஷயத்தில் மலாய்க்காரர்களின் உணர்வினை நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. மேலும் மலேசியாவில் உள்ள இந்தியர்கள், சீனர்கள், பூர்வக்குடிகள் உட்பட அனைவரின் உணர்வுகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது” என பிரதமர் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, சின் சியூ நாளிதழ் பிரதமர், யூஇசி திட்டத்தினை ஏற்க மறுப்பதாக குறிப்பிட்டிருந்தது. இக்கூற்றானது உண்மையல்ல எனவும், தான் அவ்வாறு கூறவில்லை என்றும் பிரதமர் விளக்கினார்.