Home நாடு பெட்ரோல், டீசல் விலை இன்று நள்ளிரவு தொடங்கி குறைக்கப்படும்!

பெட்ரோல், டீசல் விலை இன்று நள்ளிரவு தொடங்கி குறைக்கப்படும்!

1275
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று நள்ளிரவு தொடங்கி ஒரு லிட்டர், ரோன் 95 பெட்ரோல் விலை 1.93 ரிங்கிட்டுக்கு குறைக்கப்படுவதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார். வாராந்திர அடிப்படையில் இவ்விலையானது இனி நிர்ணயிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

டீசலுக்கான புதிய விலை லிட்டருக்கு 2.04 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்படும் வேளையில், ரோன் 97 பெட்ரோல் விலை 2.23 ரிங்கிட்டாக குறைக்கப்படுகிறது.

பெட்ரோல் விலை அறிவிப்புகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அறிவிக்கப்பட்டு, சனிக்கிழமைகளில் நடைமுறைக்கு வரும் என நிதி அமைச்சர் கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி, நிதி அமைச்சர் லிம் குவான் எங், ஜனவரி 1-ஆம் தேதி முதல் ரோன் 95 மற்றும் இதர எரிபொருள் விலைகள் வாராந்திர அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இதன் விளைவாகமலேசிய எண்ணெய் நிலைய உரிமையாளர்கள் அமைப்பு, அரசாங்கத்தின் இந்த முடிவினை எதிர்த்தது. இதனைத் தொடர்ந்து, விரிவாகப் பேசப்படும் எனவும், எண்ணெய் விலையில், வெள்ளிக்கிழமை வரையிலும் எந்தவொரு மாற்றமும் இருக்காது என நிதி அமைச்சர் அறிவித்திருந்தார்.