Home இந்தியா சரவணன் முன்னிலையில் வைரமுத்துவின் தமிழாற்றுப் படை திருப்பூரில் அரங்கேற்றம்

சரவணன் முன்னிலையில் வைரமுத்துவின் தமிழாற்றுப் படை திருப்பூரில் அரங்கேற்றம்

1373
0
SHARE
Ad

திருப்பூர் – தமிழ் மொழிக்கு அளப்பரிய பங்களிப்பு வழங்கிய பெருமகன்களை இன்றைய தமிழ் சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தும் முயற்சியாக ‘தமிழாற்றுப் படை’ என்ற தலைப்பிலான கட்டுரைத் தொடர் ஒன்றை எழுதி வரும் கவிப்பேரரசு வைரமுத்து, அந்தக் கட்டுரைகளை தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் நேரடியாக சென்று பொதுமக்கள் முன்னிலையில் வாசித்து, அரங்கேற்றி வருகிறார்.

அந்த வரிசையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை (இந்திய நேரப்படி) 5.30 மணிக்கு கோயம்புத்தூர், திருப்பூரில் மறைந்த கவிஞர் அப்துல் ரகுமான் குறித்துத் தான் வரைந்த கட்டுரையை வைரமுத்து அரங்கேற்றம் செய்கின்றார்.

மலேசியாவின் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் முன்னிலையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் கே.ஆர்.நாகராஜன்  தலைமை தாங்குகிறார்.

#TamilSchoolmychoice

கனிமொழி கருணாநிதி வாழ்த்துரை வழங்குகிறார்.