Home வணிகம்/தொழில் நுட்பம் புரோட்டோன் எக்ஸ்70 மற்றும் பெரொடுவா அரூஸ் சந்தையில் மோதுகின்றன

புரோட்டோன் எக்ஸ்70 மற்றும் பெரொடுவா அரூஸ் சந்தையில் மோதுகின்றன

1044
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா:  முதல் எஸ்யூவி ரக காரினை சந்தையில் அறிமுகப்படுத்தும், புரோட்டோன் மற்றும் பெரோடுவா இடையிலான போட்டிகள் தீவிரமடைந்துள்ளன.

புரோட்டோன், பயனீட்டாளர்களின் எண்ணத்தை புரிந்துக் கொண்டு அதன் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகையில், பெரொடுவா விற்பனை எண்ணிக்கையில் கவனம் செலுத்துகிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி அறிக்கை தெரிவித்துள்ளது.

மலேசிய ஆட்டோமொபைல் அசோசியேசன் (Malaysian Automotive Association) தரவரிசைப்படி, பெரோடுவா  நிறுவனம் 2017-ஆம் ஆண்டு பெரும்பாலான வாகனங்களை, அதாவது 204,887 வாகனங்களை விற்றுள்ளதாக பதிவிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய கார் விற்பனை நிறுவனமான புரோட்டோன் 2017-ஆம் ஆண்டில் மொத்தம் 70,991 வாகனங்களை விற்றுள்ளது.

தற்போது, புரோட்டோன் X70-கான முன்பதிவுகள் செப்டம்பர் மாதத்திலிருந்து 15,000 முன்பதிவுகளை கடந்துவிட்ட நிலையில், டிசம்பர் 12-ம் தேதி, இந்த எஸ்யூவி ரக வாகனத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்து, சராசரியாக ஒரு நாளைக்கு 200 முதல் 300 வரை இதன் முன்பதிவு உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புரோட்டோன் மற்றும் சீன வாகனத் தயாரிப்பு நிறுவனமான கீலி ஹோல்டிங் குரூப் ஆகியோருக்கு இடையிலான முதல் கார் தயாரிப்பு ஒத்துழைப்பு இதுவாகும்.

கடந்த வாரம், பெரொடுவா நிறுவனம், அந்நிறுவனத்தின் அரூஸ் எனும் எஸ்யூவி ரக வாகனத்தை அறிமுகம் செய்தது. இதன் முன்பதிவுகள் தொடங்கப்பட்டு விட்ட நிலையில், 2019-ஆம் ஆண்டு இறுதிக்குள் 31,200 வாகனங்கள் விற்கப்படும் என்ற நம்பிக்கைக் கொண்டிருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.