Home நாடு புதிய மாமன்னரைத் தேர்ந்தெடுக்க மலாய் ஆட்சியாளர்கள் சந்திப்பு!

புதிய மாமன்னரைத் தேர்ந்தெடுக்க மலாய் ஆட்சியாளர்கள் சந்திப்பு!

747
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலாய் ஆட்சியாளர்கள் கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா நெகாராவில் இன்று சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை), சுல்தான் முகமட், மாமன்னர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தப் பிறகு அனைத்து மாநில ஆட்சியாளர்களின், இந்தச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

நாட்டின் 15-வது மாமன்னராகக் கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி, சுல்தான் முகமட்,மலேசியஆட்சியாளர்களின்மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் வருகிற 2021-ல் முடிவடையும் வேளையில், நேற்று அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தார்.

புதிய மாமன்னரை தேர்ந்தெடுக்கும் வரையில், தற்போதைய துணை மாமன்னரான சுல்தான் நஸ்ரின் ஷா, அந்தப் பதவியினை வகிப்பார் என மலாய் ஆட்சியாளர்களின் மாநாடு முடிவு செய்துள்ளது.