Home நாடு பாலியல் தொல்லை: பிஎப்எம் வானொலியின் இரண்டு ஊழியர்கள் பதவி நீக்கம்

பாலியல் தொல்லை: பிஎப்எம் வானொலியின் இரண்டு ஊழியர்கள் பதவி நீக்கம்

785
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவின் புகழ்பெற்ற ஆங்கில மொழி வானொலிகளில் ஒன்றான பிஎப்எம் 89.9 (BFM 89.9) வணிகச் செய்திகளை வழங்கும் முதன்மை வானொலியாகும். இங்கு பணிபுரியும் ஆண் ஊழியர்களில் இருவர் சக பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர் என்ற புகார்களுக்கு போதுமான ஆதாரங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து அந்த ஊழியர்களை வானொலி நிர்வாகம் பதவி நீக்கம் செய்திருக்கிறது.

பிஎப்எம் நிறுவனத்தின் விசாரணைகளின் வழி, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அவ்வாறு நடந்து கொண்டது ஆதாரங்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நிர்வாகம் இந்த முடிவை எடுத்ததாக பிஎப்எம் வானொலியின் நிறுவனர் மாலிக் அலி தெரிவித்தார்.

முன்னதாக அனாமதேய கடிதங்கள் சமூக ஊடங்களில் பகிரப்பட்டு, பிஎப்எம் வானொலி ஊழியர்கள் இருவர் மற்றவர்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கின்றனர் என்ற தகவல்கள் பரப்பப்பட்டன.