கோலாலம்பூர்: நாட்டின் நீர் வினியோக சேவையை மறுசீரமைக்க அரசாங்கம் முயற்சித்து வரும் வேளையில், இவ்வாண்டில் படிப்படியாக நீர் கட்டண விகிதங்கள் உயர்த்தப்படலாம் என நீர், நிலம் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் டாக்டர் ஏ. சேவியர் ஜெயகுமார் கூறினார்.
பயனீட்டாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அது பாதுகாப்பானதாகவும் அமைவதற்கு இச்செயல்முறை முக்கியமான ஒன்றாக அமைகிறது என அமைச்சர் விளக்கினார்.
ஆயினும், இந்தக் கட்டண உயர்வு, மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்காத வகையில் செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து அனைத்து மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதற்கு நல்லதொரு கருத்துகள் பெறப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு கட்டண விகிதங்கள் இருப்பதால், நீர் கட்டண உயர்வு குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.