சிங்கப்பூர்: 2019-ஆம் ஆண்டிற்கான உலகத் தரவரிசையில் ஜப்பான் நாட்டுக் கடப்பிதழ் அதிக சக்திவாய்ந்தது என ஹென்றி இண்டெக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதனை அடுத்து, சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் உலகத் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
ஜப்பானிய குடிமக்கள் விசா இல்லாத பயணத்தை 190 நாடுகளுக்கு மேற்கொள்ளலாம் என அந்நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.
ஜெர்மனி மற்றும் பிரான்ஸ், முறையே மூன்றாவது இடத்தில் இடம் பெற்றுள்ளன. விசா இல்லாமல் சுமார் 188 இடங்களுக்கு அதன் மக்கள் பயணத்தை மேற்கொள்ள இயலும் வேளையில், அமெரிக்காவும், இங்கிலாந்தும் ஆறாம் இடத்தில் இடம் பெற்றுள்ளன. கடந்த 2015- ஆம் ஆண்டு, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் கடப்பிதழ்கள் வலுவானதாகக் கருதப்பட்டன.
இத்தரவரிசையில், மலேசிய நாட்டுக் கடப்பிதழ் 12-வது இடத்தில் இடம் பெற்றுள்ளது.