ஈப்போ: கேமரன் மலை இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, சிவப்பு நிற ஆடை அணிந்து பெண் ஒருவர் பணம் விநியோகிக்கும் படம் ஒன்று சமூக ஊடகங்களில் உலாவிக் கொண்டிப்பதை பற்றி ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்து வருவதாக, பேராக் மாநில ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் டத்தோ சாய்னால் டாருஸ் கூறினார்.
“இதுவரையிலும், புகைப்படத்தில் இருக்கும் பெண் உட்பட, ஏழு சாட்சிகளை விசாரித்து உள்ளோம்” என நேர்காணலின் போது அவர் குறிப்பிட்டார்.
ஜனவரி 13-ஆம் தேதி, நம்பிக்கைக் கூட்டணியின் சிவப்பு நிறச் சட்டையை அணிந்து, பெண் ஒருவர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கும் படத்தினை மஇகா கட்சி இளைஞர் பிரிவுச் செயலாளர், அரவிந்த் கிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
ஆயினும், வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுக்கவில்லை என்று நம்பிக்கைக் கூட்டணி அரசு மறுத்தது. தன்னார்வலர்கள் சிலர் போக்குவரத்து செலவிற்காக பணம் தரப்பட்டது என விளக்கம் கொடுக்கப்பட்டது.