Home நாடு பிடிபிடிஎன்: முன்பிருந்த தள்ளுபடி சேவை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும்!

பிடிபிடிஎன்: முன்பிருந்த தள்ளுபடி சேவை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும்!

782
0
SHARE
Ad

கோலாலம்பூர்: உயர் கல்விக் கடன்களை முழுமையாகத் தீர்க்கும் மாணவர்களுக்கு தள்ளுபடிகளை வழங்குவதை, தேசிய உயர் கல்வி நிதியம் (PTPTN) மீண்டும் அமல் படுத்த வேண்டும் என மஹாசிஸ்வா நேஷனல் அமைப்பு நேற்று (வியாழக்கிழமை) வலியுறுத்தியது.

அவ்வமைப்பின் துணைத்தலைவர் ஹாபிக் ஷாபி கூறுகையில், தற்போது, கடன் வாங்கியவர்கள், கடனை வருமானத்தில் இருந்து நேரடியாக செலுத்தும் போது, முன்னர் இருந்த 10 விழுக்காடு தள்ளுபடி சேவையை அனுபவிக்க இயலாமல் போவதோடு, கடனை முழுமையாக செலுத்துவோருக்கு 20 விழுக்காடு தள்ளுபடி தரப்படாமல் இருப்பதையும் சுட்டிக் காட்டினார்.

இம்மாதிரியான முயற்சிகளை, தக்க காரணமற்ற நிலையில் உடனடியாக நிறுத்தியது வேதனையளிக்கிறது”, என அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, மஹாசிஸ்வாநேஷனால் அமைப்பிலிருந்து, மூன்று பிரதிநிதிகள், பிடிபிடிஎன் தலைமை நிருவாகி வான் அகமட் வான் யூசோபிடம், இது குறித்த மனு ஒன்றை ஒப்படைத்தனர்.