Home நாடு அசுத்தமான நிலையில் செயல்படும் உணவகங்கள் மூடப்படும்!

அசுத்தமான நிலையில் செயல்படும் உணவகங்கள் மூடப்படும்!

1269
0
SHARE
Ad

ஷா அலாம்: தூய்மையின்மை காரணமாக, ஷா அலாம் செக்‌ஷன் 9-இல் உள்ள, 24 மணி நேர உணவகம் ஒன்று, நேற்று (வெள்ளிக்கிழமை) ஷா ஆலம் மாநகராட்சி மன்றத்தால் 14 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது.

இந்த உணவகத்தின் மீது மேற்கொண்ட ஆய்வின் போது, கடை வளாகம் தூய்மையின்றி, குறிப்பாக உணவு தயாரித்தல் மற்றும் உணவு சேமிப்பு அறைகளில் சுகாதார அம்சங்களை அலட்சியம் செய்ததற்காக இந்த உணவகம் மூட உத்தரவிடப்பட்டது என ஷா அலாம் நகராட்சித் துணைத் தலைவர் முகமட் ரஸ்சிடி ருஸ்லான் கூறினார்.

சமையலுக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் அசுத்தமாக இருந்தன. மேலும், கழிப்பறை தூய்மைக் குறைவாக, திருப்திகரமான நிலையில் இல்லை. அக்கடை தொழிலாளர்கள் டிஒய்2 (TY2) எனப்படும் நோய் எதிர்ப்பு ஊசியும் போடவில்லை” என அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மொத்தமாக 70 உணவகங்கள் அப்பகுதியில் கண்காணிக்கப் பட்டுள்ளதாகவும், இதுவரையிலும் நான்கு கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ரஸ்சிடி கூறினார். இம்மாதிரியான நடவடிக்கைகள் மேலும் துரிதப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.