Home உலகம் மலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் அரச தந்திர உறவு இல்லை- மகாதீர்

மலேசியாவிற்கும், இஸ்ரேலுக்கும் அரச தந்திர உறவு இல்லை- மகாதீர்

911
0
SHARE
Ad

இலண்டன் : இஸ்ரேலுடன் அரசதந்திர உறவை மலேசியா கொண்டிருக்காததால், அந்நாட்டைச் சேர்ந்தோர் இந்நாட்டிற்கு வரக்கூடாது என்று பிரதமர் துன் மகாதீர் முகமட் வலியுறுத்தினார்.

“பல விஷயங்களைத் தவறாக செய்பவர்களை நாட்டினுள் நுழைய விடாமல், தனது எல்லைகளை மூடுவதற்கு, மலேசியாவிற்கு உரிமை உண்டுஎன மகாதீர் கூறினார்.

இன்று, பல நாடுகளில் வெளிநாட்டவர்கள் தங்கள் நாட்டிற்கு வருவதை ஏற்க முடியாமல், அந்நாட்டு அரசாங்கத்தையே கவிழ்த்துவிடுகிறார்கள். மலேசியாவிற்கும், இஸ்ரேலுடன் அரசதந்திர உறவு இல்லை. அவர்கள் பல தவறுகளை செய்கிறார்கள், ஆனால், அதன் மீது எவ்விதமான அக்கறையும் பிறருக்கு இல்லைஎன அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) இலண்டனில் நடந்த ஆக்ஸ்போர்ட் யூனியன் நிகழ்ச்சியில் டேவிட் வில்கின்சன் என்பவர் கேட்டக் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.