Home நாடு கிள்ளானில் க.ப.அறவாணன் நினைவேந்தல் கூட்டம்

கிள்ளானில் க.ப.அறவாணன் நினைவேந்தல் கூட்டம்

818
0
SHARE
Ad
பேராசிரியர் க.ப.அறவாணன்

கிள்ளான் – அண்மையில் மறைந்த தமிழகத்தின் தமிழறிஞர் பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்களின் பணிகளை நினைவுகூரும் வகையில் நினைவேந்தல் கூட்டம் ஒன்றை மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடத்துகிறது.

முது பேராசிரியராய் விளங்கி நூற்றுக்கு மேற்பட்ட சமூக வரலாற்று ஆய்வு நூல்களை எழுதியவர் முனைவர் க. ப. அறவாணன். அவர் படைப்பிலக்கிய நூல்களும் வெளியிட்டுள்ளார்.

23.12.2018-இல் காலமான அவரது நினைவேந்தல் நிகழ்வு 27.01.2019-ஆம் நாள் காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

#TamilSchoolmychoice

நடைபெறும் இடம்:

SMILEYS FOOD SDN. BHD.,

10, Lorong Tingkat off Jalan Istana,

411000 Klang, Selangor. Tel: 603-33715369

(AIA கட்டடத்திற்கு எதிர்ப்புறம்).

இந்த நிகழ்ச்சியில் தமிழறிஞர் டத்தோ ஆ. சோதிநாதன் முன்னிலை வகித்துப் படத்திறப்புச் செய்வார். இயக்கத் தலைவர் திரு. ப. கு. சண்முகம் தலைமை வகிப்பார். நிகழ்வு ஏற்பாட்டுக் குழுத்தலைவர் முரசு நெடுமாறன் இரங்கற்பா வாசிப்பார். அவர் எழுதிய பாடலுக்கு இசைகூட்டி இசையாசிரியர் திருமதி அல்லிமலர் மனோகரனைப் பாடச் செய்து காணொளி உருவாக்கி நிகழ்வில் படைப்பார் இசைமுரசு இளவரசு நெடுமாறன்.

இயக்க செயலாளர் பொன்னி கணேசன் வரவேற்புரை நிகழ்த்த, துணைச் செயலாளர் இரா. சந்திரா நன்றி நவில்வார். முனைவர் மு. சங்கர் நிரலை நெறிப் படுத்துவார்.

நிகழ்வில் அறிஞர் க. ப. அறவாணனை நன்குணர்ந்த பேராசிரியர் டத்தோ இராசேந்திரன் சாரதா நாகப்பன், முனைவர் மு. பரமசிவம் முத்துசாமி, விரிவுரைஞர் மன்னர் மன்னன் மருதை, முனைவர் நாகப்பன் ஆறுமுகம் ஆகியோர் நினைவேந்தல் உரை நிகழ்த்துவர்.

பிற்பகல் 12.30 மணியளவில் நினைவேந்தல் நிகழ்வு நிறைவை எய்தும். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நிலைக்கத்தக்க இலக்கிய வரலாற்று ஆவணங்களைத் தந்து சென்ற பெருமகனார் நினைவைப் போற்றுமாறு ஏற்பாட்டாளார் சார்பில் முனைவர் முரசு நெடுமாறன் அனைவரையும் கேட்டுக் கொள்கிறார்.