Home வணிகம்/தொழில் நுட்பம் ஏர் ஆசியா 400 மில்லியன் ரிங்கிட் கோரி மலேசியா ஏர்போர்ட்ஸ் மீது எதிர்மனு

ஏர் ஆசியா 400 மில்லியன் ரிங்கிட் கோரி மலேசியா ஏர்போர்ட்ஸ் மீது எதிர்மனு

937
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஏர் ஆசியா நிறுவனத்திற்கும், மலேசிய விமான நிலையங்களை நிர்வகிக்கும் மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் நிறுவனத்திற்கும் இடையில் நீண்ட காலமாக நீறுபூத்த நெருப்பாகத் தொடர்ந்து நீடித்து வரும் பூசல்கள் தற்போது நீதிமன்ற வழக்காக வெடித்துள்ளது.

மலிவு விலைக் கட்டண விமான நிறுவனமான  ஏர் ஆசியா விதித்த விமான நிலைய சேவைக் கட்டணம் அதிகமாக இருக்கிறது என்றும், இதனால் மக்களுக்கு மலிவு விலையில் விமான சேவை வழங்கும் தங்களின் நோக்கத்தை அடைய முடியவில்லை என்றும் கூறி ஏர் ஆசியா உயர்த்தப்பட்ட சேவைக்கட்டணத்தை செலுத்தத் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து ஏர் ஆசியா செலுத்தாத கட்டணங்களைக் கோரி மலேசியா ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கொன்றைப் பதிவு செய்துள்ளது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து அந்த வழக்கில் எதிர்மனு தொடுத்திருக்கும் ஏர் ஆசியா 400 மில்லியன் ரிங்கிட்டை அந்த எதிர்மனுவில் கோரியிருக்கிறது.

தாங்கள் எதிர்நோக்கிய இழப்பீடுகளையும், நஷ்ட ஈட்டையும், கேஎல்ஐஏ 2 விமான நிலையத்தில் எதிர்நோக்கிய சங்கடங்களையும் 400 மில்லியன் ரிங்கிட்டாக ஏர் ஆசியா மதிப்பிட்டிருக்கிறது.