Home நாடு புதிய மாமன்னர் யார்? காத்திருக்கிறது மலேசியா!

புதிய மாமன்னர் யார்? காத்திருக்கிறது மலேசியா!

1984
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியாவின் புதிய மாமன்னரைத் தேர்ந்தெடுக்க மலேசியாவின் 9 மாநிலங்களின் ஆட்சியாளர்கள் இன்று தலைநகரில் கூடவிருக்கும் நிலையில் அடுத்த மாமன்னர் யார் என்ற பரபரப்பும், ஆர்வமும் மலேசியா முழுவதும் அதிகரித்து வருகிறது.

இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணிக்குத் தொடங்கும் ஆட்சியாளர்கள் மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் மலாய் ஆட்சியாளர்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மலாய் ஆட்சியாளர்கள் பின்பற்றிவரும் சுற்றின் அடிப்படையில் தற்போது பகாங், ஜோகூர், பேராக் ஆகிய மாநிலங்களின் ஆட்சியாளர்கள் அடுத்த மாமன்னராகத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர்.

#TamilSchoolmychoice

அந்த அடிப்படையில் அண்மையில் பகாங் சுல்தானாக முடிசூட்டப்பட்ட சுல்தான் தெங்கு அப்துல்லா அடுத்த மாமன்னராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் பேராக் ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷா துணை மாமன்னராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.