Home நாடு குறைந்த விலை வீடுகள் கட்டும் திட்டத்திற்காக, பி40 மக்கள் பதிய வேண்டும்!

குறைந்த விலை வீடுகள் கட்டும் திட்டத்திற்காக, பி40 மக்கள் பதிய வேண்டும்!

1038
0
SHARE
Ad
படம்: நன்றி ஸ்டார்

ஈப்போ: பி-40 எனப்படும் குறைவாக வருமானம் பெறும் அடித்தட்டு மக்கள், பேராக் மாநிலத்தின் வீடு மற்றும் நில வாரியத்துடன் (LPHP) பதிவுச் செய்துக் கொள்ள வேண்டும் என மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அகமட் பாய்சால் அசுமு கூறினார். இவ்வாறு செய்வதன் மூலம், மாநிலம் இவர்களுக்கான குறைந்த விலை வீடுகளை கட்டும் திட்டத்திற்காக, திட்டங்களைத் தீட்ட இயலும் என அவர் தெரிவித்தார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு முதல், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரையில் சுமார் 10,000 பேர்கள் மட்டுமே எல்பிஎச்பி என்ற வீடமைப்புப் பிரிவிடம் பதிந்துள்ளதாக அவர் கூறினார். பேராக் மாநிலத்தில் மட்டும் 2,000 ரிங்கிட்டிற்கு குறைவாக வருமானம் பெரும் குடும்பங்கள் 80 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருப்பதால், அவர்கள் அனைவரையும் அகமட் பாய்சால் பதிவுச் செய்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார். 

பொதுமக்கள் எல்பிஎச்பி இணையப் பக்கத்தின் மூலமாகவும், அருகில் உள்ள நம்பிக்கைக் கூட்டணி பிரதிநிதி அலுவலகத்திலும் தங்களைப் பதிந்துக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.