Home நாடு ஜோகூர் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களின் கல்விப் பட்டறை

ஜோகூர் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களின் கல்விப் பட்டறை

1442
0
SHARE
Ad

மலாக்கா – ஜோகூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத்தின் ஏற்பாட்டில், தலைமை ஆசிரியர்களுக்கான 21ஆம் நூற்றாண்டு கல்விப்பட்டறை மலாக்கா தஞ்சோங் பீடாரா விடுதியில் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு நடத்தப்பட்டது.

ஜோகூர் மாநில கல்வி இலாகா இயக்குனர் துவான் ஹாஜி ஷஹாருடின் பின் ஷாரிப் இந்தப் பட்டறையை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

68 தலைமை ஆசிரியர்கள் இத்தலைமைத்துவப் பட்டறைகளில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

#TamilSchoolmychoice

மூன்று நாட்கள் தொடர்ந்து நடந்த இப்பட்டறையில் உயர் கல்வி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மலாக்கா மாநிலத்தின் பள்ளி ஆயினர்கள் கமலநாதன், தயாபு, தமிழ்ப்பள்ளிகளின் பள்ளிகளின் தேசிய அமைப்பாளர் நாகரத்தினம், ஜோகூர் மாநிலத் தமிழ்ப் பள்ளி அமைப்பாளர் பாண்டுரங்கன், மலாக்கா மாநில கல்வி இலாகாவின் தமிழ் மொழிப் பிரிவின் முன்னாள் துணைத் தலைவர் ஆனந்த குமார் ஆகியோர் இப்பட்டறைக்கு மரியாதை நிமித்தம் வருகை புரிந்து தத்தம் வழங்கப்பட்ட தலைப்பில் உரையாற்றினர்.

பள்ளி நிர்வாகம், தமிழ் மொழியின் சவால்கள், தலைமை ஆசிரியர் மன்ற நிர்வகிப்பு உட்பட்ட தலைப்புகளில் பட்டறைகள் நடத்தப்பட்டன.

ஜோகூர் மாநிலம் தலைமை ஆசிரியர் மன்றத்தின் தலைவர் பாலசுப்ரமணியம் மன்ற நிர்வாகம் குறித்து பட்டறையை வழி நடத்தினார். தலைவர் மற்றும் செயலாளர் செல்வம் அவர்தம் செயற்குழுவினர் ஆகியோர் பட்டறை சுமுகமாக நிறைவடையும் கடமையை நன்றே செய்து முடித்தனர்.

ஜனவரி 24ஆம் நாள் மதியம் 1 மணிக்கு நிகழ்ச்சி நிறைவடைந்தது. மாநிலப் பள்ளி ஆயினர் செல்வநாதன் நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

நன்றி: தொகுப்பு உதவி – நிர்மாயா ராதா