Home உலகம் அடுத்த ஆண்டில் புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்து விற்பனை!

அடுத்த ஆண்டில் புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்து விற்பனை!

982
0
SHARE
Ad

இஸ்ரேல்: பல காலமாக புற்றுநோயினால் அவதியுற்று உயிர் இழந்தோர் ஏராளம். இந்நோயினால், பலரது வாழ்க்கை  திசை மாறிப் போனதும் உண்டு.

இதனை முறியடிக்கும் வண்ணமாக,  ஆசிலரேட்டட் எவாலியூசன் பயோ டெக்னாலஜிஸ் லிமிட்டட் என்ற இஸ்ரேல் நாட்டு நிறுவனம் சார்பாக, சிறிய மருத்துவக் குழு ஒன்று புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்து 100 விழுக்காடு புற்றுநோயை குணமாக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் எதிர்காலத்தில் புற்று நோயால் ஏற்படும் இறப்புகள் பல மடங்குகள் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நோயினைத் தீர்க்கும் மருந்துகள் இன்றளவும், உலகில் இல்லை. அந்நோயின் தாக்கத்தை குறைக்கவும், அதன் வளர்ச்சியை தடுக்கவும் மட்டுமே இதுவரை மருந்துகளும் செயல்முறைகளும் உள்ளன.

#TamilSchoolmychoice

மூடாட்டோ (MuTaTo) என்ற சிகிச்சையின் மூலம் புற்றுநோயைக் குணப்படுத்தலாம் என்று அந்நிறுவனம் கூறுகிறது. MuTaTo என்பது மல்டி டார்கெட் டோக்ஸின் (Multi-Target Toxin) எனப்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் மருத்து நேரடியாக மனித உடலில், புற்றுநோய் பாதித்த உயிரணுக்களை நோக்கி சென்று அதை மட்டும் தாக்குகிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.