Home வணிகம்/தொழில் நுட்பம் 300,000 முதல் 1 மில்லியன் ரிங்கிட் விலையிலான வீடுகளுக்கு முத்திரை வரி இனி கிடையாது

300,000 முதல் 1 மில்லியன் ரிங்கிட் விலையிலான வீடுகளுக்கு முத்திரை வரி இனி கிடையாது

1123
0
SHARE
Ad

கோலாலம்பூர் – எதிர்வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் மார்ச் 3-ஆம் தேதி வரை கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் மாபெக்ஸ் எனப்படும் மலேசிய சொத்துடமைக் கண்காட்சியை முன்னிட்டும், 2019-ஆம் ஆண்டுக்கான வீட்டுடமைத் திட்டப் பிரச்சாரத்தை முன்னிட்டும், நிதியமைச்சு ஸ்டாம்ப் டுட்டி எனப்படும் முத்திரை வரி விதிப்பில் சில சலுகைகளை அறிவித்திருக்கிறது.

அதன்படி 3 இலட்சம் ரிங்கிட் முதற்கொண்டு 1 மில்லியன் ரிங்கிட் வரையிலான வீடுகளை வாங்குபவர்களுக்கு இனி முத்திரை வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

இதன் மூலம் மேலும் அதிகமான வீடுகள் விற்பனையாகும் எனவும், விற்கப்பட முடியாமல் தேங்கிக் கிடக்கும் வீடுகளுக்கு விடிவு காலம் பிறக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து இந்தப் பிரச்சாரத்தில் பங்கெடுக்கும்படி வங்கிகளும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

மலேசிய சொத்துடமைக் கண்காட்சியில் சுமார் 180 வீடமைப்பு மேம்பாட்டாளர்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை விற்பனைக்காக மக்களிடம்  முன்வைப்பர். இவற்றின் மதிப்பு 22.5 பில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கண்காட்சியின் மூலம் வீடுகளை வாங்குவோருக்கு சிறப்புக் கழிவுகளும் வழங்கப்படும்.