Home வணிகம்/தொழில் நுட்பம் கேஎல்சிசி: பார்க்ஸன் விற்பனை மையம் மூடுவிழா காண்கிறது!

கேஎல்சிசி: பார்க்ஸன் விற்பனை மையம் மூடுவிழா காண்கிறது!

941
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் பல ஆண்டுகளாக தனது இருப்பை வெளிப்படுத்தி வந்த பார்க்ஸன் குரூப் நிறுவனம், கேஎல்சிசியில் அமைந்துள்ள தனது விற்பனை மையத்தை மூட உள்ளதாக நேற்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

அதனை முன்னிட்டு, வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி வரையிலும், சிறப்பு விலையில் பொருட்கள் விற்கப்படும் என அது குறிப்பிட்டிருந்தது.

#TamilSchoolmychoice

பார்க்ஸன் நிறுவனம், தற்போது தென்கிழக்காசியப் பகுதியில் மட்டும் 100-கும் மேற்பட்ட விற்பனை மையங்களைக் கொண்டிருப்பதோடு, மலேசியாவில் 40-கும்மேற்பட்ட மையங்களைக் கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு, மாஜு ஜங்ஷனில் அமைந்துள்ள தனது விற்பனை மையத்தை பார்க்ஸன் மூடியது குறிப்பிடத்தக்கது.  மேலும், 1987-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சுங்கை வாங் பிளாசா மற்றும் வியட்னாமில் உள்ள பார்க்ஸன் பிளமிங்டன் மையத்தையும் மூடியது குறிப்பிடத்தக்கது.

அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், வியாபார உத்திகளை மாற்றி அமைக்க வேண்டி இந்த விற்பனை மையத்தை மூடுவது அவசியமாகிறது என்றார்.