Home நாடு 15-வது பொதுத் தேர்தலில் கேமரன் மலை தொகுதியை மஇகா திரும்பப் பெறும்!

15-வது பொதுத் தேர்தலில் கேமரன் மலை தொகுதியை மஇகா திரும்பப் பெறும்!

952
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 15-வது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு, மஇகா கட்சிக்குத் திரும்பக் கிடைக்கும் என கட்சியின் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ விக்னேஸ்வரன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

அண்மையில், நடைபெற்று முடிந்த கேமரன் மலை இடைத் தேர்தலுக்கு, தேசிய முன்னணியின் மற்றொரு வேட்பாளருக்கு அத்தொகுதி, இரவலாகத் தரப்பட்டது என அவர் கூறினார்.

இம்முறை, கேமரன் மலையில் பூர்வக்குடி வேட்பாளரை நிறுத்தியது, தக்க சமயத்தில் தேசிய முன்னணி எடுத்த சரியான முடிவு என அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், வருகிற செமினி சட்டமன்றத் தேர்தலில், மஇகா கட்சி இயந்திரம், தேசிய முன்னணி வேட்பாளருக்கு முழு ஆதரவைத் தரும் என உறுதி அளித்தார்.