Home இந்தியா பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்!

பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்!

1460
0
SHARE
Ad

சென்னை: இந்திய மத்திய அரசின் இடைக்கால வரவு செலவு திட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழகத்திற்கான 2019 மற்றும் 2020-கான நிதிநிலை அறிக்கை வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த அறிக்கையை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்  சட்டப்பேரவையில் தாக்கல் செய்வார்.

#TamilSchoolmychoice

நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில்,  நலிவடைந்து இருக்கும் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் எனவும், மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது

இந்த நிதிநிலை அறிக்கை, அறிவிப்புக்கு பின்னர் மக்கள் மத்தியில், பல்வேறான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதனைத் தொடர்ந்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இது வெறும் முன்னோட்டம் தான், என தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் பெரும்பாலான நடுத்தர மக்கள் எதிர்பார்த்திருந்த வரிவிதிப்பு முறையில், தனிநபர் வருமான வரி விலக்கு 2.5 லட்சம் ரூபாயிலிருந்து, 5 லட்ச ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளது.